Asianet News TamilAsianet News Tamil

திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ஸ்டாலின்!

திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுத்தாக்கல் செய்யும் போது திமுக நிர்வாகிகள் ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, வி.பி.துரைசாமி, ராஜா முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

DMK chief Election; Stalin nomination
Author
Chennai, First Published Aug 26, 2018, 10:19 AM IST

திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுத்தாக்கல் செய்யும் போது திமுக நிர்வாகிகள் ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, வி.பி.துரைசாமி, ராஜா முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. DMK chief Election; Stalin nomination

முன்னதாக திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திமுக தலைமை கழகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். வேட்புமனுவினை திரும்பப் பெற 27-ம் தேதி பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 27-ம் தேதி மாலை 5 மணியளவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.DMK chief Election; Stalin nomination

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதற்கான வேட்பு மனுவை எடுத்துக்கொண்டு திமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் நேரில் சென்று ஆசிபெற்றார். இதனையடுத்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். திமுக பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகனும் வேட்புமனு கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார்.

DMK chief Election; Stalin nomination

 இதைத்தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios