திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சட்டமன்ற செயலாளர் சீனிவாசனை சந்தித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சார்பில் திமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர்.  மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து  நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து  வருகின்றன .  இது இஸ்லாமியர்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டுள்ள சட்டம்,  இது நாட்டின் அமைதியை சீர்குலைக்க வழிவகுத்துவிடும் எனவே அதை திரும்பப் பெற வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

கேரளம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்  இச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன .  காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் இச்சட்டத்தை ஏற்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேவேலையில் குடியுரிமை  திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .  இந்நிலையில் தமிழக சட்டசபையிலும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் .

 

இதுதொடர்பாக அவர் சட்டத்துறை செயலாளர் சீனிவாசனுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.  அதில் சட்டமன்ற விதி 172 -ன் படி  சட்டமன்ற விதியை தளர்த்தி தனித் தீர்மானம் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் . அதில் நாட்டு மக்களால் பெரிதும் எதிர்க்கப்படும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார் திமுக கூட்டணி கட்சிகள் அமைதி வலியுறுத்தியுள்ளனர் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஆரம்பித்துவிடுகிறது தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.