திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு !! அப்பல்லோவில் அனுமதி !!

சிறுநீர்த் தொற்று காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வழக்கமான பரிசோதனைக்குப் பின் அவர் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

dmk chief  admitted ih appllo hospital

கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியின்  தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர், தொடர் பிரச்சாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகத் தொற்றுக்கான வழக்கமான பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

dmk chief  admitted ih appllo hospital.

அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.ஸடாலினின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது என்றும்,  வழக்கமான சிகிச்சைக்கு பின், அவர் வீடு திரும்புவார்' எனவும்  அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வருடம், ஜூலை மாதம் இடது கண்ணில் ஏற்பட்ட கண்புரை பாதிப்பின் காரணமாக கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios