தமிழக சட்டமன்றதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் 10ம் தேதி வெளியாகிறது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, நேர்காணல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும், இந்தியன் முஸ்லிம் லீக்கிற்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும், காங்கிரஸ்,  மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே மார்ச் 7-ம் தேதி திருச்சியில் திமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சி பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வரும் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.