தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கியிருக்கிறார்கள். பிரதான கட்சிகளான திமுக அதிமுக கூட்டணிக்கென்று சொர்ப்ப அளவில் சீட் ஒதுக்கிவிட்டு வேலையை தொடங்கிவிட்டார்கள். 

திமுக தொகுதிகளில் யார் வேட்பாளர் என்று ஐபேக் டீம் மூலம் தொகுதிக்கு 3வேட்பாளர் பட்டியலை கையில் வைத்திருக்கிறது திமுக. ஐபேக் டீம் தமிழகம் முழுவதும் வேட்பாளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு தொகுதி வாரியாக சென்று அங்குள்ள பிரச்சனைகள், ஆளும் கட்சிகளின் அட்டகாசம், மக்களின் குறைகள், யாருக்கு என்ன வாய்ப்பு என அலசி ஆராய்ந்து தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கிறது.

கடந்த தேர்தலில் திமுக கஜானாவை திறந்திருந்தால் ஆட்சியை கைப்பற்றியிருக்கும். பணத்தை இழுத்து பிடித்ததும். "வெற்றி நமதே" என்கிற போதையில் இருந்ததும் தான் காரணம். இன்னும் பலதொகுதிகளில் மாவட்டச்செயலாளர்கள் மற்றவர்கள் வெற்றி பெற்றால் எங்கே தனக்கு அமைச்சர் பதவிக்கு சிக்கல் வந்துவிடுமோ என்கிற பயத்தில் உள்ளடி வேலைபார்த்து தோற்றகடித்தார்கள்.இதுவெல்லாம் திமுகவிற்கு மைனஸாக அமைந்து போனது.

இந்த முறை இதுபோன்று நடந்து விடக்கூடாது என்பதில் திமுக தலைமை மற்றும் ஐபேக் டீம் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதற்காக தான் மாவட்டத்தில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது அந்த டீம்.  கூடிய விரைவில் பல மாவட்டங்களில் மாவட்டச்செயலாளர்கள் பதவி காலிஆகும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் என்று மாவட்டத்தை 3 அல்லது 4பிரிவாக பிரித்து அவர்களிடம் தேர்தல் வெற்றிக்கான முழு அசைன்மெண்ட் வழங்க இருப்பதாகவும் தகவல்.


 
இந்த தேர்தலில் மூத்த நிர்வாகிகளுக்கு சீட் நோ.இளைஞர்கள், சமூக பணிகளில் அக்கறை காட்டியவர்கள், மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்க தீவிரம் காட்டிவருகிறது ஐபேக் டீம்.
ஆளும் கட்சியின் மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியை காரணம் காட்டி திமுக எளிதாக வெற்றி பெறலாம் என திட்டம் போட்டிருக்கிறது. இந்த தேர்தல் திமுகவுக்கு வாழ்வா? சாவா? போராட்டம்.இந்த முறையும் திமுக வெற்றி பெறவில்லை என்றால் திமுக சகாப்தம் க்ளோஸ்.! 
திமுகவில் கனிமொழி உதயநிதி செல்வி ஆகியோர் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இந்த முறை அதிக அளவில் களத்தில் இருப்பார்கள். மத்தியில் கனிமொழி. மாநிலத்தில் கனிமொழியின் டாமினேசனை குறைப்பதற்காக செல்வியை களத்தில் இறக்கிவிடவும் திமுக தயாராகிக் கொண்டிருக்கிறது.


சீனியர்கள் எல்லாம் எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை. கலைஞராக இருந்தால் நேரடியாக போய் சண்டை கூட போட்டு தங்களுடைய காரியத்தை முடித்துக்கொண்டு வருவார்கள்.ஆனால் கலைஞர் இல்லாததால் ஸ்டாலினிடமோ.!உதயநிதியிடமோ.! இவர்கள் போய் எதையும் சொல்லமுடியவில்லை.இவர்களிடம் எந்த ஆலோசனையும் கேட்பதில்லை என்கிற வருத்தம் ஒருபக்கம்;இன்னொரு பக்கம் தங்களுடைய பரிந்துரைகள் எதுவுமே எடுபடாது போல் இருக்கிறது. மாவட்டத்தில் கட்சி வேலை செய்வது நாங்கள்.., எங்களுக்கு தான் தெரியும் யாரை வேட்பாளராக போட்டால் வெற்றி பெறலாம் என்று அந்த தார்மீக உரிமை எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது என்று குமுறிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். 


இந்த நிலையில் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் இணைந்திருப்பது திமுக தலைமை எதிர்பார்க்காத ஒன்று. இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவிடாமல் தடுக்கும் பணியில் ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்.அதிருப்தியில் இருக்கும் முக. அழகிரி தேர்தல் நேரத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடாமல் இருக்கவும் அவரை சரிக்கட்டும் வேலையையும் ஒரு டீம் செய்து வருகிறது.