’அப்பாவின் தொகுதியில் மகன் தான் போட்டியிட வேண்டும்’ என்கிற சென்டிமெண்டைக் கூறி மு.க.ஸ்டாலினுக்காக விருப்பமனு அளித்த திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனே திவாரூர் தொகுதி வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. 

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் தேர்வு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி பூண்டி கலைவாணன் ஆகியோர் பெயரில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக ஸ்டாலினுக்காக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைனாணன். கருணாநிதி எம்எல்ஏவாக பதவி வகித்த தொகுதி என்பதால், திமுக யாரை வேட்பாளராக யார் நிறுத்தப்படுகிறார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு எகிறி வருகிறது. ஸ்டாலின், உதயநிதி, கருணாநிதி மகள் செல்வி ஆகியோரது பெயர்கள் முணுமுணுக்கப்பட்டன. 

இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மு.க.ஸ்டாலின் பெயரில், பூண்டி கலைவாணன் விருப்ப மனு தாக்கல் செய்தார். ’’கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அங்கே ஸ்டாலின் போட்டியிட வேண்டும். மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு அளிக்க விரும்பினர். அப்பா தொகுதியில் மகன்தான் நிற்க வேண்டும் என்பதால், நான் அவர் பெயரில் விருப்ப மனு அளித்துள்ளேன்’’ என இதற்கு பூண்டி கலைவாணனன் விளக்கமும் கூறினார். ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட விரும்பவில்லை. இருப்பினும் நான் அவருக்காக விருப்பமனு தாக்கல் செய்தேன்’’ என அவர் தெரிவித்தார். உதயநிதிக்கும் அவரது ரசிகர்கள் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். 

கருணாநிதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி என்பதால் அங்கு திமுகவுக்கு வெற்றிபெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், திரூவாரூர் தொகுதியில் போட்டியிட திமுகவில் பலரும் ஆரவம் காட்டி வருகின்றனர். அவர்களை உடனே அணுகும் பூண்டி கலைவாணன், சமாதானப்படுத்தி தடுத்து வருகிறார். தனக்கு யாரும் போட்டியாக விருப்பமனு செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பூண்டி கலைவாணன். மு.க.ஸ்டாலின் விரும்பாத போதும் அவருக்காக விருப்ப மனு மூலம் மு.க.ஸ்டாலினை தாஜா செய்துள்ளார். இப்படி கருணாநிதி குடும்பத்தின் மீதுள்ள விசுவாசத்தை காட்டி, தொகுதி மக்களின் அனுதாபத்தை பெற அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டிருந்தாலும் மீடியா பரபரப்பிற்காகவே இந்த மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணன் தான் திமுக வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.