dmk candidate announcement today
ஆர்கே நகர் தொகுதி இடை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சியினரும் தேர்தலில் போட்டியிடுதற்கான வியூகத்தை அமைத்து வருகின்றனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுதாக பேசப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.

தேர்தல் தேதி அறிவித்த உடனேயே, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு பெறப்பட்டது. இதில், 17 மனுக்களை திமுக தலைமையிடம் சமர்ப்பித்துள்ளனர்.

சிம்லா முத்து சோழன், 2 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கடந்த 2016 தேர்தலில், ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார். இதேபோல் பகுதி செயலாளர்கள் மணி, கணேஷ் ஆகியோர் உள்பட 17 பேர் மனு செய்துள்ளனர்.
