நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கோரி மாணவர்களை அணிதிரட்ட முயன்ற திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை நீக்க வேண்டி தமிழகத்தில் இருந்து மருத்து மாணவர்கள் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

இதை ஊக்குவிக்கும்  வகையில் திமுக சார்பில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் நிகழ்வு நடைபெற்றது.

இது குறித்து குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்க்காக, வேண்டுகோள் கடித மாதிரி இனைக்கப்பட்ட அஞ்சல் அட்டைகளை மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடையே திமுகவினர் வழங்கி வந்தனர்.

மேலும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  

தகவலறிந்து வந்த ஏராளமான போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த கூறினர். திமுகவினர் மறுப்பு தெரிவிக்கவேசேலம் மத்திய மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் உட்பட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.