தூத்துக்குடி மாவட்ட கடை பகுதியை சேர்ந்தவர் பில்லா ஜெகன் இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளராகவும் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார் 

இவர் தூத்துக்குடி புறவழிச்சாலையில் லாரி செட் நடத்தி வருகின்றார் இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது இந்த நிலையில் அவரது கடைசி தம்பியான    சிம்சன் மனைவியுடன் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது 

நேற்று  பிற்பகலில்  சிம்சன் மனைவியை குடும்பத்தினர் சமரசம்  செய்து மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இரவு லாரி தொழில் பங்கு  தரும்படி சிம்சன் பில்லா ஜெகன் இடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில்  போதையில் இருந்த பில்லா ஜெகன் ஆத்திரமடைந்து கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சிம்சன்  தொடைபாகத்தில் சுட்டதில்  ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் சம்பவ இடத்திலேயே பலியானார் 

இதைத் தொடர்ந்து அங்கிருந்து பில்லா ஜெகன் தப்பி ஓடிவிட்டார் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ளபோது பில்லா ஜெகன் கையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது ? என போலீசார் நடத்திய விசாரணையில் அது கள்ளத் துப்பாக்கி என தெரியவந்தது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த பில்லா ஜெகன் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.