திமுகவின் பி டீம் ஓபிஎஸ்.. அவங்க மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! ஜெயக்குமார்

முழு அதிகாரம் படைத்த பொதுக்குழுதான் ஓபிஎஸ்ஐ கட்சியில் இருந்து நீக்கியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எப்படி கட்சி பெயர் லெட்டர் பேடை பயன்படுத்த முடியும் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

DMK B Team OPS..  Former Minister Jayakumar

ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஓபிஎஸ் நடத்தியது தனிப்பட்ட நிறுவனத்தின் கூட்டம். ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கண்களில் கண்ணீருடன் பேசியதில் இருந்தே குடும்பத்துக்காகவே ஓபிஎஸ் செயல்படுகிறார் என்பது தெரிகிறது. 

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமியை தற்குறி என விமர்சித்த பண்ருட்டி ராமச்சந்திரன்?

DMK B Team OPS..  Former Minister Jayakumar

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி ஆரம்பித்து அவர் பலத்தை நிரூபித்து காட்டலாம். ஆள்பிடிக்கும் வேலையில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார். யாருக்கும் பணம் கொடுத்து கட்சி நடத்த வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. ஒருமையில் பேசியதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் விரக்தியின் உச்சத்தில் பேசியுள்ளார். நாம் ஒருவர் நமக்கு நால்வர் என ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். இதுவும் காணாமல் போகும். 

DMK B Team OPS..  Former Minister Jayakumar

முழு அதிகாரம் படைத்த பொதுக்குழுதான் ஓபிஎஸ்ஐ கட்சியில் இருந்து நீக்கியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எப்படி கட்சி பெயர் லெட்டர் பேடை பயன்படுத்த முடியும் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தினமலர் பத்திரிகை ஈடுபட்டு வருகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் பண்பாக பேசக்கூடியவர். அவர் ஏன் ஒருமையில் பேசினார் என தெரியவில்லை. திமுகவின் பி டீ மாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க;- அவரு மேல ரொம்ப மரியாதை இருக்கு! எதுக்கு இப்படி செய்றாரு தெரியல!பண்ருட்டியாரை நினைத்து வருத்தப்பட்ட ஜெயக்குமார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios