திமுகவினரின் வலைதளங்கள் முடக்கப்படுவதை தடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Add Asianetnews Tamil as a Preferred Source

சமீப காலமாக திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் இணையதள வலைதளங்கள் முடக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். ஆனால் நீதிபதிகள், அதற்கு மறுப்பு தெரிவித்து, திமுக சார்பில் தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படும் என உத்தரவிட்டு, மறுப்பு தெரிவித்தனர்.
