வேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில் மீண்டும் நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்பு திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் புதிநீதிக்கட்சி தலைவர் ஏ.சிசண்முகமும் போட்டியிட்டனர். பணப்பாடுவாடா புகாரால் வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் தனகே சீட் கிடைக்கும் என தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார் ஏ.சி.சண்முகம். அதிமுக மீண்டும் ஏ.சி.சண்முகத்தை தங்களது கூட்டணி வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனையடுத்து திமுக தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மீண்டும் கதிர் ஆனந்தை வேட்பாளராக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் பணம் சிக்கியதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 37 இடங்களில் திமுக வெற்றி பெற்று இருப்பதால் கதிர் ஆனந்தை திமுக நம்பிக்கையுடன் மீண்டும் களமிறக்கி உள்ளது.