மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கிய உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் திமுக, இந்தியக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், 2 தொகுதிகள் திமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும். எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்த பிறகு அறிக்கப்படும்’ என அவர் தெரிவித்தார். 

தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது இடங்களும் புதுச்சேரியில் ஓரிடமுமாக பத்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கு தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் வகையில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்யூனிஸ்டு கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.