தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி வோட்டர் நிறுவனத்துடன் ரிபப்ளிக் டி.வி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இன்றைக்கு தேர்தல் நடந்தால் தமிழக்கத்தில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற கேள்விக்கு, திமுக கூட்டணி வெற்றி பெறும் என விடை கிடைத்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 34 தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்பு கூறுகிறது. மாறாக அதிமுக - பாஜக கூட்டணி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கருத்துக்கணிப்பி தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 44.8 சதவீத ஓட்டுகளையும் அதிமுக - பாஜக கூட்டணி 32.3 சதவீத ஓட்டுகளையும் இதர கட்சிகள் 22.9 சதவீத ஓட்டுகளையும் பெறும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் வெளியான இதே நிறுவனஙள் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல டிசம்பரில் வெளியான கருத்துக்கணிப்பிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் இந்தியாவிலேயே காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக தமிழகம் இருக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.