சி-வோட்டர் மற்றும் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் இணைந்து, நாடு முழுவதும் 70 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்புகளை நடத்தியன. இந்தக் கருத்துக்கணிப்பின்படி தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 305 இடங்கள் வரை வெல்லும் எனக் கருத்துக்கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணி பலமாக இருந்தாலும், தமிழகத்தில் இந்தக் கூட்டணி பலவீனமாக இருப்பதாக கருத்துக்கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 31 தொகுதிகளில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.

 
மேலும் தமிழகத்தைப் போல கேரளா, பஞ்சாப், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.