Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ், மதிமுக, விசிக.. திமுகவின் நிலைபாடு என்ன?

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை ஆளுநர் கூறிவருகிறார்.

DMK alliance parties boycott Governor  RN.Ravi tea party tvk
Author
First Published Jan 24, 2024, 11:13 AM IST | Last Updated Jan 24, 2024, 11:39 AM IST

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டரோ அன்று முதலே தமிழக அரசுக்கு இடையே மோதல் போக்கு உச்சம் பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை ஆளுநர் கூறிவருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறிவருகின்றனர். 

DMK alliance parties boycott Governor  RN.Ravi tea party tvk

சமீபத்தில் திருவள்ளுவர் தினத்தன்று காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையானது. அதேபோல், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- ஆளுநர் ரவி வாங்கி தரும் கெட்டபெயர் எல்லாம் பாஜக கணக்கில் தான் போய் சேருகிறது.. கொதிக்கும் செல்வப்பெருந்தகை.!

இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால், ஆளுங்கட்சியான திமுக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவும் பங்கேற்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க;-  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னம் முடக்கமா? வைத்தியலிங்கம் சொன்ன பரபரப்பு தகவல்!

DMK alliance parties boycott Governor  RN.Ravi tea party tvk

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி தேநீர் விருந்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios