பதவி ஒன்றையே குறிக்கோளாய் வைத்து மற்ற சாதியினரின் அனுதாபத்தை பெற்று வாக்குகளை அள்ளி விடலாம் என திமுக தலைமை செய்ல்பட்டு வருவதாகக் கூறி அக்ட்சியின் நிர்வாகி ஒருவர் கட்சியை விட்டு வெளியேறி இருப்பது உடன்பிறப்புகளுக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசு மேற்பட்ட சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளது. இதனை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திமுகவின் இந்த செயல்பாட்டை எதிர்த்து கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் தென்காசி ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளரான ஆறுமுகம் என்பவர். 

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க. அழன்பழகனுக்கு அவர் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், ’’ எனது தந்தை காலம் முதல் எனது குடும்பத்தினர் திமுகவில் இருந்து வருகிறோம். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து சட்டமாக்கிவிட்ட மேல் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதனை அறிந்து வேதனையுற்றேன். எங்கள் சமூகம் சாதிய இட ஒதுக்கீட்டினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கி விட்டது.

இதை திமுக தலைமையோ அல்லது உடன் இருப்பவர்களோப் அறியாதவர்கள் அல்ல. ஆனால் பதவி ஒண்ரையே குறிக்கோளாய் கொண்டு இதன் மூலம் மற்ற சாதியினரின் அனுதாபத்தை பெற்று வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற தவறான எண்ணத்தில் கணக்குபோட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மனம் வேதனையடைந்தேன்.  எனவே எனது மனசாட்சிக்கு உட்பட்டு நானும் சாதி ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டவன் என்பதால் கழகத்தில் இருந்து விலகுகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடும் திமுகவின் கொள்கை பிடிக்காமல் ஒருவர் கட்சியை விட்டே விலகி இருப்பது  திமுகவிரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தோடு தலைமையின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்து இருப்பது தலைமையை சூடேற்றி இருக்கிறது.