Asianet News TamilAsianet News Tamil

உரிமை குழு நோட்டீஸ் விவகாரம் - ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை ...!

dmk active leader stalin meet to mlas about commission notice
dmk active leader stalin meet to mlas about commission noties
Author
First Published Sep 4, 2017, 11:37 AM IST


சட்டப்பேரவையில் குட்கா, பான் புகையிலை கொண்டுவந்தது தொடர்பாக உரிமை குழு நோட்டிஸ் அனுப்பியது குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் சபாநாயகர் அனுமதி இல்லாமல் திமுகவினர் பான் மசாலா, குட்கா போதை வஸ்துக்களை எடுத்து வந்து தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். 

இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டது.

இதைதொடர்ந்து  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உரிமைக்குழு கூடியது. அப்போது, குட்கா போன்ற போதை பொருட்கள் கொண்டுவந்தது குறித்து 21 திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

அந்த நோட்டீஸுக்கான கால கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த நோட்டீஸ் குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதில் திமுக பதிலளிக்க கால அவகாசம் கேட்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios