dmk action leader m.k.stalin tribute n.periyasamy

தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நுரையீரல் தொற்றுக்காக அவருத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.பெரியசாமி நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து என்.பெரியசாமியின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வரும் ஞாயிற்றுக் கிழமை இறுதி சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி சென்ற மு.க.ஸ்டாலின், என்.பெரியசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் பெரியசாமிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.