புகுந்து விளையாடிய துரைமுருகன்... பழி தீர்த்த ஸ்டாலின்..! அதிர்ச்சியில் பிரேமலதா...!

கூட்டணி பேசப்போன தேமுதிக நிர்வாகிகளை கலாய்த்து அனுப்பியதுடன் பேச்சுவார்த்தை விவரங்களையும் வெளியிட்டு பிரேமலதா தலையில் பெரிய குண்டை போட்டுள்ளார் துரைமுருகன்.

DMDK wanted to join our alliance.... alleges Durai Murugan

கூட்டணி பேசப்போன தேமுதிக நிர்வாகிகளை கலாய்த்து அனுப்பியதுடன் பேச்சுவார்த்தை விவரங்களையும் வெளியிட்டு பிரேமலதா தலையில் பெரிய குண்டை போட்டுள்ளார் துரைமுருகன்.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு இணையான தொகுதிகள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக தொடர்ந்து வந்தது. ஆனால் திமுக கூட்டணியை இறுதி செய்த கையோடு, தேமுதிக தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அதிமுக. அதுநாள் வரை பேச்சுவார்த்தையின் போது பம்மிய அதிமுக நிர்வாகிகள் அதன் பிறகு மிஞ்ச ஆரம்பித்தனர். 4 தொகுதிகள் மட்டும் தான் ஒதுக்க முடியும், இனி உங்கள் விருப்பம் மோடி வருகிறார் வந்து சேருங்கள் என்று ஓ.பி.எஸ் தரப்பிடம் இருந்து தேமுதிகவிற்கு தகவல் சென்றுள்ளது. DMDK wanted to join our alliance.... alleges Durai Murugan

இதனால் பதற்றம் அடைந்த பிரேமலதா உடனடியாக நிர்வாகிகளை அழைத்து வழக்கம் போல் கேப்டனை வைத்துக் கொண்டு ஆலோசனை நடத்த ஆரம்பித்தார். பெரும்பாலான நிர்வாகிகள் திமுக கொடுப்பதை வாங்கிக் கொண்டு அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்று புலம்ப ஆரம்பித்தனர். அப்போது முடிந்ததை பேச வேண்டாம், என்று பிரேமலதா கண்டித்துள்ளார். அப்போது தான் ஏற்கனவே தேமுதிகவின் பொருளாளராகவும், மாநில துணைச் செயலாளராகவும் இருந்து தற்போது சேலம் மாவட்டச் செயலாளராக உள்ள இளங்கோவன் தான் திமுக தரப்பில் பேச தயார் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் பேசிவிட்டு வந்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கூறு என கேப்டன் இளங்கோவனுக்கு உத்தரவிட்டுள்ளார். DMDK wanted to join our alliance.... alleges Durai Murugan

இதனால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இளங்கோவன் துரைமுருகன் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக அவசர அவசரமாக சுதீசை அதிமுக நிர்வாகிகளை சந்திக்க பிரேமலதா அனுப்பி வைத்தார். அங்கு சென்று தேமுதிக எவ்வளவோ எடுத்துக் கூறியும் நான்கு தொகுதிகள் என்பதை அதிமுக பிடிவாதம் காட்டியுள்ளது. இந்த நிலையில் தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகன் வீட்டுக்கு சென்ற தகவல் ஊடகங்களில் வெளியானது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பியூஸ் கோயல் தான் பிரதமரை வரவேற்க செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார்.

 DMDK wanted to join our alliance.... alleges Durai Murugan

தங்கமணியும், வேலுமணியும் கூட சுதீஷிடம் சொல்லாமலேயே அங்கிருந்து சென்றனர். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் ஓட்டல் லாபியில் சுதீஷ் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது தான் துரைமுருகன் பேட்டி ஒளிபரப்பானது. அதில் தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வர விரும்புவதாகவும் ஆனால் தங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்றும் துரைமுருகன் திட்டவட்டமாக கூறினார். மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சுதீஷ் கூறியதாகவும் திமுகவிற்கு வர விரும்புவதாக அவர் தெரிவித்ததாகவும் உண்மையை போட்டு உடைத்துள்ளார். DMDK wanted to join our alliance.... alleges Durai Murugan

அதுமட்டும் இன்றி தன்னிடம் திமுக கூட்டணிக்கு வருவதாக கூறிவிட்டு அதிமுகவோடு பேசப்போவதாக ஊடகங்களுக்கு சுதீஷ் பேட்டி அளித்துள்ளார். இதன் மூலம் தேமுதிக நிலைப்பாட்டில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக உணர்கிறேன் என்று பற்ற வைத்தார் துரைமுருகன். இந்த பேட்டி ஒளிபரப்பான அடுத்த நொடி தேமுதிகவின் இமேஜ் ஒட்டு மொத்தமாக காலியாகிவிட்டது. மேலும் அதிமுக தரப்பும் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூற ஆரம்பித்துள்ளது. DMDK wanted to join our alliance.... alleges Durai Murugan

தேமுதிக தரப்பு தன்னை சந்திக்க வருவதை ஸ்டாலினிடம் கூறி முதலிலேயே அனுமதி கேட்டுள்ளார் துரைமுருகன். சந்திப்பிற்கு பிறகும் கூட ஸ்டாலின் கூறியதையே அப்படியே செய்தியாளர் சந்திப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேமுதிகவின் இரட்டை நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவித்து திமுக கூட்டணியில் அக்கட்சியை சேரவிடாமல் எப்போதும் தடுத்து வரும் பிரேமலதாவின் மூக்கை ஸ்டாலின் ஒரேடியாக உடைத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios