Asianet News TamilAsianet News Tamil

கட்சி ஆரம்பித்ததிலிருந்து கோஷ்ட்டி அரசியல் செய்த மச்சான்!! மகனை வைத்தே ஆப்படிக்கும் விஜயகாந்த்?

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் அரசியல்  வருகையால், வெடவெடத்துப் போயுள்ளாராம் கட்சியில் செல்லமாக தளபதி என அழைக்கப்படும்  மைத்துனர் சுதீஷு.

DMDK vijayakanth revenge his brother in law LK Sudeesh
Author
Chennai, First Published Oct 21, 2018, 3:03 PM IST

கட்சி ஆரம்பித்ததும் முதல் தேர்தலை சந்தித்து எமஎல்ஏவான விஜயகாந்த் , அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி போட்டு எதிர்கட்சி அந்தஸ்த்தை அடைந்தால், யார் கண்ணு பட்டதோ? ஒரு புதிய கட்சிக்கு கிடைத்த சந்தோஷம் முழுமையாக அனுபவிக்காமல் வெறும் எதிர்கட்சி தலைவர் என்ற பதவியை மட்டுமே அனுபவித்தார். அடுத்த சில தேர்தல்களில் தொடர் தோல்வி உடல்நலம் பாதிப்பு என அடுத்தடுத்த சறுக்கலை சந்தித்தது விஜயகாந்த்தின் தேமுதிக. 

இந்த தேமுதிகவானது திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து கட்சித்  நடத்துவதாக சொன்ன விஜயகாந்த்,  அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ்  ஆகியோர் கட்சியின் மொத்த அதிகாரத்தையும் கைப்பற்றி விஜயகாந்த்தை டம்மியாகவே வந்த்திருன்தனர். கூட்டணி ஆகட்டும், கட்சிப் பொருப்பாகட்டும் எல்லாமே அக்காவும், தம்பியுமே  கணக்குப் போட்டு கட்சிதமாக கவனித்து வந்தனர். 

DMDK vijayakanth revenge his brother in law LK Sudeesh

கூட்டணி முடிவெடுப்பதில், பிரேமலதா மூக்கை நுழைத்தார். அவரது தவறான நடவடிக்கைகளால், தே.மு.தி.க., பின்னடைவை சந்தித்ததாக, கட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது.கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்வதில், சுதீஷ் கட்சிக்குள்ளேயே ஒரு தனி கேங் வைத்திருந்துள்ளார்.  அந்த கேங்கில் செல்வாக்கு மிக்கவர்களை தேடி பிடித்து, பதவியில் வழங்கினார். இப்போது, அவர்கள் யாரும் கட்சியில் இல்லை. சுதீஷின் வளர்ச்சிக்கு மட்டுமே, இது உதவியது.

 விஜயகாந்த், உடல்நிலை பாதிப்பால் அவதிப்படும் நிலையில், எல்.கே.சுடீஷின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்தது. இதனால் மூத்த நிர்வாகிகள் சுதீஷ் மீது கடுப்பில் இருந்துள்ளனர்.  இந்த நிலையில் தான் தனது  மகன் விஜய பிரபாகரன், கட்சியில் நுழைந்துள்ளார். அவருக்கு, தே.மு.தி.க., வினர் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. மாநில நிர்வாகிகளுடன் கூட்டணி அமைத்து, சுதீஷ் செய்த வேலைகளை, விஜயகாந்தின் உண்மை விசுவாசிகள், விஜய பிரபாகரனிடம் பட்டியல் போட்டு, கூற துவங்கியுள்ளனர். இதனால், சுதீஷுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.  

DMDK vijayakanth revenge his brother in law LK Sudeesh

இதற்கு முன்னதாக தான், கடந்த 6 ஆம் தேதி  பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நேற்று நடைபெற்ற தேமுதிக 11ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், “ பெங்களூரு போன்ற நகரங்களுக்கு நிகரான வளர்ச்சியைச் சென்னை நகரம் அடையவில்லை. அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நல்ல தலைவர் வரவேண்டும். அந்த தலைவர் யார் என்பது உங்களுக்கே தெரியும்.  லட்சம் பேர் வந்தாலும் தேமுதிகவில் இருந்து ஒரு செங்கல்லைக்கூட அசைக்க முடியாது. என்னுடன் பல லட்சம் இளைஞர்கள் கை கேர்க்க வேண்டும். வரவுள்ள தேர்தலில் தேமுதிக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என அதிரடியாக பேசி தனது அரசியல் என்ட்ரியை பதிவு செய்தார்.


தே.மு.தி.க., பலவீனம் அடைவதற்கு, பிரேமலதா மட்டுமல்ல; சுதீஷும் முக்கிய காரணம். இது, கட்சியில் உள்ள விஜயகாந்தின் ரசிகர்களுக்கு தெரியும்.  விஜயகாந்த் மகனிடம், சுதீஷின் நடவடிக்கைகளை பலரும் புகார் கூற துவங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி, தன் செல்வாக்கை அதிகரிக்க, என்னென்ன காரியங்களை செய்தார் என்றும், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனிடம்  ஒவ்வொன்றாக சொல்லி வருகிறார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios