Asianet News TamilAsianet News Tamil

சுதீஷோட சொத்து மதிப்பு முந்நூறு கோடியா உயர்ந்தது எப்படி...? விஜயகாந்த் பதில் சொல்வாராம்..!

வெளுத்தெடுக்கும் வெயிலுக்கு எங்கேடா நிழல்...என்று தவியாய் தவிக்கும் வேட்பாளர்களிடம், ‘உங்களோட வெற்றி வாய்ப்பு எப்படியிருக்குது? ஓவரா பணம் கொடுக்குறீங்களாமே?’ என்றெல்லாம் மீடியாக்கள் கேள்விக் கொக்கிகளைப் போட்டால், வேட்பாளருக்கு தாறுமாறாக கோபம் எகிறத்தான் செய்யும். ஆனால் மீடியாவிடம் மூஞ்சை காட்டினால் சிக்கலாகிவிடும் என்பதால் மிஸ்டர் கூல் ஆக சுற்றி வருகின்றனர் வேட்பாளர்கள்.

DMDK Sudhish property worth three hundred crore?
Author
Tamil Nadu, First Published Apr 3, 2019, 2:51 PM IST

அரசியல் அனலுக்கு இணையாக கோடை வெயிலும் பெரும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. கும்பிட்ட கரங்களுக்குள் வியர்வை கொட்டிக் கொண்டிருந்தாலும், சிரித்த வாய் சுருங்காமல் பிரசாரத்தில் இருக்கிறார்கள் வேட்பாளர்கள். 

வெளுத்தெடுக்கும் வெயிலுக்கு எங்கேடா நிழல்...என்று தவியாய் தவிக்கும் வேட்பாளர்களிடம், ‘உங்களோட வெற்றி வாய்ப்பு எப்படியிருக்குது? ஓவரா பணம் கொடுக்குறீங்களாமே?’ என்றெல்லாம் மீடியாக்கள் கேள்விக் கொக்கிகளைப் போட்டால், வேட்பாளருக்கு தாறுமாறாக கோபம் எகிறத்தான் செய்யும். ஆனால் மீடியாவிடம் மூஞ்சை காட்டினால் சிக்கலாகிவிடும் என்பதால் மிஸ்டர் கூல் ஆக சுற்றி வருகின்றனர் வேட்பாளர்கள்.

 DMDK Sudhish property worth three hundred crore?

தமிழத்தின் ஸ்டார் வேட்பாளர்களில் விஜயகாந்தின் மச்சான் சுதீஷும் வருகிறார். கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டிபோடும் அவரை ஓரங்கட்டி எடுக்கப்பட்ட பேட்டியின் ஸ்மார்ட் ஹைலைட் பாயிண்டுகள் இதோ... “எங்க கட்சியோட வாக்கு வங்கி குறைஞ்சு போச்சுன்னு சொல்றாங்க. அது சுத்த பொய்யிங்க. மக்கள் மத்தியில இன்னமும் கேப்டன் செல்வாக்கு அப்படியேதான் இருக்குது. எங்க கட்சிக்கு மட்டுமில்லை, எங்க கூட்டணிக்கே அமோக வரவேற்புதான் போங்க. (அவ்வ்வ்! எப்டில்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது) ஏற்கனவே 2011  தேர்தல்ல அ.தி.மு.க. கூட கூட்டணி வெச்சு, அமோக வெற்றி பெற்றோம். அந்த ராசி இப்பவும் தொடரும்.(அப்போ ஜெயலலிதா இருந்தாங்க, விஜயகாந்து நடந்தார், பேசினார். இப்போ?) DMDK Sudhish property worth three hundred crore?

அதென்னங்க எங்களை மட்டும் ‘ஒரு கட்சியை விமர்சனம் பண்ணிட்டு, அப்புறம் அவங்க கூடவே கூட்டு போடுறீங்க?’ன்னு கேக்குறீங்க. எல்லா கட்சிகளும்தானே இந்த வேலையை பார்க்கிறாங்க. நாங்க மட்டுமா செய்யுறோம்! அரசியலில் சூழ்நிலைக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். அதை தே.மு.தி.க. செஞ்சால் மட்டும் குத்தம்! இல்லையா? 

எங்க கூட்டணியின் பிரதமர் வேட்பாளரைப் பற்றி கேட்கிறாங்க. சர்வதேசத்துலேயும் இப்படியொரு பிரதமரை பார்க்க முடியாது. அந்த வகையில் இந்திய மக்கள் கொடுத்து வெச்சவங்க! (எதை சுதீஷு?) மத்தியில் பி.ஜே.பி. மீண்டும் ஆட்சி அமைத்தால் நாங்கள் ஆட்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதான்னு ஒரு கேள்வி எழுது. இந்த பேச்செல்லாம் தேர்தல் முடிவு வந்ததுக்கு அப்புறம் பேசப்பட வேண்டிய விஷயங்கள். மேலும் இதற்கெல்லாம் கேப்டன் தான் பதில் சொல்லணும். (அது எப்போ?)” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். DMDK Sudhish property worth three hundred crore?

அவரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் உங்களோட சொத்து மதிப்பு முந்நூறு கோடி உயர்ந்திருக்குதே!ன்னு கேட்கிறப்ப...அந்த கேள்வியை முடிக்கும் முன்பே ‘பேட்டி ஆவல்கள் இருந்தாலும், கட்சி அலுவல்கள் அழைப்பதால் இத்துடன் செல்கிறேன். மீண்டும் சந்திப்போம்!’ன்னு சொல்லிட்டு கெளம்பிட்டாராம். மச்சான் தெளிவாதான் இருக்காப்ல!

Follow Us:
Download App:
  • android
  • ios