தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசி விதித்த தடை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரேமலதா, “பொதுமக்களுக்கோ சட்டம் ஒழுங்குக்கோ எந்த ஒரு பிரச்னையும் ஏற்பட கூடாது என்பதற்காக அரசாங்கம் தன் கடமையைச் செய்கிறது. இந்தத் தடை பற்றிய விளக்கத்தைத் தமிழக அரசுதான் தர வேண்டும்.” என்று தெரிவித்தார். 
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேமுதிக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரேமலதா, “வரும் ஜனவரி முதல் வாரத்துக்குள் தேமுதிகவின் செயற்குழு கூட்டப்படும். அந்தக் கூட்டத்தில் கூட்டணி பற்றிய தெளிவான முடிவை தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கேப்டனின் உடல்நிலை நன்றாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த்தைப் பார்க்கலாம். வருகிற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும். அதிமுக ஆட்சி நிறையும் குறையும் கலந்த ஆட்சியாகவே உள்ளது” பிரேமலதா தெரிவித்தார்.