அதிசயம் அற்புதம் என்ற வார்த்தைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில், பாலின் தேவை என்பது மிக முக்கியமானது பாலில் நச்சுத்தன்மை இருக்கிறது என்று சொல்லி உள்ளனர். 

ஆனால் அமைச்சர் அரசு பாலகத்தில் அவ்வாறு இல்லை என்று சொல்லியுள்ளார். தனியார் நிறுவனங்களில் தேவை என்றால்  ஆராய்ச்சி செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார்,  எது எப்படியாக இருந்தாலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிராவில்  ஒரே இரவில் ஆட்சி அமைத்துள்ளனர்,  மகராஷ்டிராவில் இவ்வளவு ஒரு அவசர கால கட்டத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.  அதிகார பூர்வமாகவே ஆட்சிக்கு வந்து இருக்கலாம், மிகப்பெரிய குழப்பமாகவே இரவோடு இரவாக ஆட்சி அமைத்துள்ளனர். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே இருப்பதை மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது .உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும்  தேதி என்பது அறிவிக்கப்படவில்லை. முதலில் தேதி அறிவிக்கப்படட்டும், முதலில் எப்பொழுது தேர்தல் நடக்கப் போகிறது என்பதை சொல்லட்டும் அப்பொழுதுதான்.  எத்தனை சீட்டுகள் போன்றவைகள் எல்லாம் கேட்க முடியும் என்றார்.  

திமுக ஆட்சி காலத்திலே மறைமுகத் தேர்தல் என்பது இருந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள  அதிசயம் அற்புதம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை மக்கள்தான்.  எஜமானர்கள் மக்கள். மக்கள் வருத்தத்தோடு உள்ளனர்,  மக்களுக்கு தெரியும் யார் தங்களுக்கான தலைவர் என்று அவர்களை மக்கள் மிகச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுப்பார்கள். அதிசயம் அற்புதம் என்ற வார்த்தைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.