தேர்தல் முடிந்ததும் திமுக கூட்டணியில் இருந்த  தலைவர்கள் ஸ்டாலினைச் சந்தித்து வருகின்றனர். ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, தேமுதிக உள்ளிட்ட காட்சிகள் அதிமுக மீது செம்ம கடுப்பில் உள்ளார்கள். நடக்கவுள்ள நான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட பிளான் போட்டு வருகிறார்களாம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும் அதில் கூட்டணியின் ஒத்துழைப்பு பற்றியும், சில இடங்களில் திமுகவினர் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த விஷயங்களைக்கூட ஸ்டாலினிடம் பேசினார்கள். அதுமட்டுமல்ல, அடுத்து நடக்கவிருக்கும் 4 தொகுதி இடைத் தேர்தல்கள் பற்றியும் தீவிரமாக ஆலோசித்தனர்.

ஆனால், அதிமுக கூட்டணியில் இதுபோன்ற எந்த ஒரு சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கவே இல்லை. தேர்தலுக்குப் பின் அதிமுக கூட்டணித் தலைவர்கள் சந்தித்துக் கொண்டதாகவோ, விவாதித்ததாகவோ தகவல்கள் வரவில்லை.

இந்நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நான்குபேரையும்  பிரேமலதா, தேர்தலுக்குப் பிறகு அழைத்துப் பேசியிருக்கிறார். கூடவே சில முக்கிய நிர்வாகிகளும் இருந்துள்ளனர். அப்போது தேர்தலில் அதிமுகவின் ஒத்துழைப்பு பற்றி பிரேமலதா கேட்க, அனைவரும் தங்கள் உள்ளக்குமுறல்களைக் கொட்டிவிட்டனர். 

கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட அவரது தம்பி சுதீஷ் தொடங்கி, வடசென்னை அழகாபுரம், மோகன்ராஜ்  என யாருக்குமே அதிமுக ஒத்துழைப்பு தரவே இல்லை. அவங்களோட  20 தொகுதிகள், அடுத்ததாக 18 சட்டமன்றத் தொகுதிகள்லதான் தீவிர கவனம் செலுத்தினாங்களே தவிர வேறு எந்த ரிஸ்க்கும் எடுக்கவே இல்லை. கூட ஒட்டுக்கேட்கவும் வரல, கடைசி நேரத்தில் கூட கவனிக்கல. இதே கூட்டணி தொடர்ந்தா நல்லாயிருக்குமா?  நீங்களே முடிவுபண்ணிக்கோங்க என குமுறி இருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பு நடந்ததை வைத்து, கூட்டணி என்ற பெயரில் வெறும் டம்மியாக வெறும் நான்கு தொகுதிகளை கொடுத்து கழட்டி விட்டதுமல்லாமல், ஒத்துழைப்பே தராமல் இப்படி செய்ததால் கடும் காண்டில் இருக்கும் தேமுதிக , நான்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தர வேண்டுமா? இல்ல  தனித்தே களமிறங்கலாமா? என யோசனையில் இருக்கிறார்களாம். நான்கு தொகுதிகளில் சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் தேமுதிக கணிசமான வாக்கு வங்கியை கையில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.