2011 தேர்தலில் அ.தி.மு.க.வும், 2016 தேர்தலில் தி.மு.க.வும் விஜயகாந்த் உடனான கூட்டணிக்கு அலையாய் அலைந்ததை நாடறியும். ஆனால் ஜஸ்ட் ரெண்டரை வருடங்களில் தன் ஒட்டுமொத்த செல்வாக்கையும் இழந்து, ஒரேடியாய் சரிந்துவிட்டது தே.மு.தி.க. என்பதற்கு இதோ இந்த விஷயம்தான் நேரடி சாட்சி...

உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருக்கிறார் விஜய்காந்த். இந்த முறை சிகிச்சைக்குப் பின் பெரியளவில் விஜயகாந்த் தேறி வருவார்! என்று பலமாய் நம்பிக் கொண்டிருக்கின்றனர் அவரது கட்சியின் தொண்டர்கள். அதேவேளையில் அமெரிக்காவில் இருந்தபடியே கட்சியின் போக்கையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் கழக பொருளாளரான பிரேமலதா. 

விஜயகாந்த் சென்னை திரும்பிய பின் ‘நாடாளுமன்ற தேர்தலில் யாரோடு கூட்டணி வைக்கலாம்? என்று நிர்வாகிகளிடம் எழுத்துப்பூர்வமாக கேட்டு முடிவு செய்யப்படும்.’ என்று அக்கட்சியிலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், அப்படி கேள்வி கேட்கையில் நிர்வாகிகளின் பதில் என்னவாக இருக்கும்? என்று இன்ஃபார்மலாக ஒரு சர்வேயை நடத்தச் சொல்லி தம்பி சுதீஷூக்கு கட்டளையிட்டார் பிரேமா. அதை அவர் செய்து முடித்து, ரிசல்ட்டைப் பார்த்தால் ‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்போம்.’ என்று கிட்டத்தட்ட 99% நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்களாம். 

தமிழகமெங்கும் தி.மு.க.வுக்கு ஆதரவான காற்று வீசுகிறது! பிரபல செய்தி சேனல்களின் சர்வே கூட ஸ்டாலின் கை ஓங்கியிருப்பதாகவே சொல்கிறது! இந்த நிலையில் தங்கள் நிர்வாகிகள் இப்படி அ.தி.மு.க.வை தேர்ந்தெடுப்பது ஏன்? தோல்வி முகத்திலுள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கு எந்த லாபமுமில்லையே, பின் ஏன்? என்று விசாரித்துள்ளார் பிரேமலதா. 

அதற்கு சுதீஷ் சொன்ன விளக்கம்...”உனக்கு வந்த டவுட் எனக்கும் வந்துச்சுக்கா. நான் இதுபத்தி விசாரிச்சேன், அப்போ கிடைச்ச தகவல்...தி.மு.க. கூட்டணி வெற்றிகரமான கூட்டணிதான். அங்கே போய் சேர்ந்தால் நிச்சயம் நாலு தொகுதிகளாச்சும் கிடைக்கும், அதில் அத்தனையுமோ அல்லது 75%மோ வெற்றி உறுதி. ஆனால் அதன் மூலமா நம்ம கட்சியிலிருந்து ஒருத்தர் எம்.பி.யாவார், இது மூலமா கட்சி எழுந்து உட்காரும், அண்ணியாரும் தலைவரும் டெல்லிக்கு போயிட்டு வருவாங்க அவ்வளவுதான். 

ஆனால் அ.தி.மு.க. கூட கூட்டணி வெச்சால் நாலஞ்சு இடங்களை ஒதுக்குவாங்க. அங்கே மட்டுமில்லாம அத்தனை தொகுதிகளிலும் அவங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்றதுக்காக பணத்தை அள்ளிக் கொடுப்பாங்க, எவ்வளவு வேணும்னாலும் டிமாண்ட் செஞ்சு தொகை வாங்கலாம், இதை வெச்சு கடனையும் அடைக்கலாம், செட்டிலும் ஆகலாம்! தி.மு.க. பின்னாடி போனால் வெற்றி மட்டுமே கிடைக்கும் பணம் கிடைக்காது.’ன்னு பதில் வந்திருக்குது. இதுதான் நம்ம கட்சியோட இன்னைய நிலை.” என்றாராம். அமெரிக்காவில் பிரேமலதாவுக்கு பேச்சே வரவில்லையாம் இதைக்கேட்டு. ‘பணத்துக்காக கேப்டனோட தன்மானத்தையே அடமானம் வைக்க துணிஞ்சுட்டாங்களே! என்னால நம்ப முடியலையே சுதீஷ்!’ என்றாராம் உடைந்த குரலில். பாவம்யா கேப்டன்!