dmdk leader vijayakanth speech at ifthar function
நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்த விஜயகாந்த், அதிரடியாக பேட்டி அளித்தார். அதில், மாட்டிறைச்சி விவகாரம், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
தே.மு.தி.க. சார்பில் கோயம்பேட்டில் நேற்று இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்த், அதிரடியாக பல கருத்துக்களைக் கூறினார்.
அப்போது பேசிய அவர், விஜயகாந்த் நோயி... நோயி... நோயி... என்னய்யா நோய். நோய் வந்தா ஆஸ்பத்திரிக்கு போங்க. எல்லா மனுசனுக்கும் நோய் வரத்தான் செய்யும். விஜயகாந்துக்கு நோய் வந்துடுச்சு... நோய் வந்துடுச்சுன்னு சொல்றீங்க என்று கோபமாக பேசினார்.
சமீபகாலமாக மிகவும், இயலாத நிலையில் இருந்த விஜயகாந்த், நேற்றைய விழாவில் தெளிவாக உடல்நிலை நன்று தேறிய நிலையில் காணப்பட்டார். ஓ.பி.எஸ்.ஐ மு.க.ஸ்டாலினே விமர்சிக்காத நிலையில் விஜயகாந்த் தனக்கே உரிய பாணியில் ஓ.பி.எஸ்.யும் சேர்த்து ஒரு வாங்கு வாங்கினார்.
