கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தமது கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளுமாறு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவருக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் அரசு அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர் . கொரோனா  வைரஸ் நாடுமுழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இறந்தோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது சுமார் 690 நோயாளிகளுடன் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது ,  மகாராஷ்டிராவில் சுமார் 1,078 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 576 பேருடன் டெல்லி  மூன்றாவது இடத்திலும் ,  364 பேருடன் தெலங்கானா நான்காவது இடத்திலும், 343 பேருடன் ராஜஸ்தான் ஐந்தாவது இடத்திலும்,   336 பேருடன் கேரளா ஆறாவது இடத்திலும் இடம்பெற்றன . 

இந்நிலையில் தமிழகத்தில் வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது .  இதுவரை தமிழகத்தில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் .  இதனால்   தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது , இலையில்  அதிகம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ படுக்கை வசதிகளையும் மற்றும்  வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு  அதிக அளவில் கட்டிடங்களையும் ,  அறைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது .  இந்நிலையில் இதை அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ,  வைரஸால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியையும் ,  தேமுதிக தலைமை அலுவலகத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு  முன்வந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தார் ,

இதனையடுத்து அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, உடனே சுகாதாரத் துறை அதிகாரிகளை ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வு செய்துள்ளது .   இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர்  விஜயகாந்த் மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும் தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள விடுத்த வேண்டுகோளை ஏற்று, இன்று செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் ஜான்,  மற்றும்  டிஆர்ஓ திருமதி பிரியா ,  செங்கல்பட்டு டிஎஸ்பி திரு கண்ணன் ,  மதுராந்தகம் டிஎஸ்பி திரு கந்தன்,  செங்கல்பட்டு ஆர்டிஓ திரு, செல்வம் ,  மதுராந்தகம் ஆர்டிஓ திருமதி, லட்சுமி,  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆண்டாள் அழகர்  பொறியியல் கல்லூரியில் இன்று ஆய்வு நடத்தினர்,  தற்போது கல்லூரி விடுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது ,  

எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்  என விஜயகாந்த் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... சமீபத்தில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில்  உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில் தேமுதிக தலைவர் தனக்கு  சொந்தமான கல்லூரியை முன்வந்து வழங்கியுள்ளார்.  சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை கட்சி தொடங்கி மக்களுக்காக விஜயகாந்த் செலவு செய்து வரும் நிலையில் , தற்போதும்  மக்களுக்காக  தனது கல்லூரியை கொடுக்க முன்வந்திருப்பதின் மூலம் விஜயகாந்த் மக்கள் தலைவர்தான்  என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.