சற்று நேரத்திற்கு முன்பு, திமுகவில் ஆத்தூர் தனி தொகுதி வேட்பாளரை மாற்றி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததைப் போலவே தேமுதிகவும் முக்கிய தொகுதி வேட்பாளரை மாற்றியுள்ளது.

2011ம் ஆண்டை போலவே அதிமுக கூட்டணியுடன் இணைந்து தான் வர உள்ள சட்டமன்ற தேர்தலை தேமுதிக எதிர்கொள்ளும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். 40யில் ஆரம்பித்த தொகுதி பங்கீட்டு பேரம் மெல்ல, மெல்ல இறங்கி வந்து 18 எம்.எல்.ஏ. + ஒரு எம்.பி.சீட் என்ற கோரிக்கையை தேமுதிக முன்வைத்தது. ஆனால் அதற்கு செவிசாய்க்காத எடப்பாடியார் 13 சீட்டுக்கு மேல் ஒண்ணு கூட எக்ஸ்ட்ரா கிடையாது என கறாராக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கேப்டன் விஜயகாந்த் அறிவித்தார். 

முதலமைச்சர் எடப்பாடியாரின் சூடு சொற்களை தாங்க முடியாமல் தான் தேமுதிகவில் இருந்து வெளியேறினோம் என பிரேமலதா நேற்று அளித்த பேட்டியில் பகிரங்கப்படுத்தியிருந்தார். இதனிடையே தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தேமுதிக அறிவித்துள்ளது. 


சற்று நேரத்திற்கு முன்பு, திமுகவில் ஆத்தூர் தனி தொகுதி வேட்பாளரை மாற்றி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததைப் போலவே தேமுதிகவும் முக்கிய தொகுதி வேட்பாளரை மாற்றியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில்,‘நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திரு.பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு.M.சிவக்குமார் (மாவட்ட கழக அவைத்தலைவர்) அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் அமமுக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவை திரட்டி கழக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.