என்னா ஆட்டம் போட்டீங்க... இப்போ தெரியுதா கேப்டனோட ராஜதந்திரம்... அதிமுகவை வெறுப்பேற்றும் தேமுதிக..!

எங்கள் கட்சி கூட்டணிக்காக ஒரு மாதமாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அதிமுக நிர்வாகிகளை தலையை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டார். 

DMDK Decreasing the AIADMK

அதிமுக கூட்டணிக்கு இறுதிவரை ஆட்டம் காட்டி வரும் விஜயகாந்த் வீடுவரை வழிய சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் வராததால் கடுப்பில் உள்ளனர் அதிமுகவினர். ஜெயலலிதா இருந்தபோது எந்த கட்சியிடமும் கூட்டணிக்கு இப்படி கெஞ்சியதில்லை. மற்ற கட்சியினரில் வாசலுக்கு சென்றும் நின்றதில்லை.DMDK Decreasing the AIADMK

போயஸ்கார்டன், அதிமுக தலைமை கழகத்துக்கு கூட்டணி கட்சியினர் வந்து செல்வதுதான் வழக்கம். இதுவரை கூட்டணிக்காக ஜெயலலிதா இறங்கி சென்றதே இல்லை. அப்படிப்பட்ட அதிமுகவை விஜயகாந்த் இப்படி தவிக்க விடுகிறாரே என அக்கட்சி தொண்டர்கள் கடுப்பாகி வரும் நிலையில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தின் இந்த நடவடிக்கையை ராஜ தந்திரம் என்கிறார்கள்.  DMDK Decreasing the AIADMK

இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள், ‘ஜெயலலிதா இருந்தவரை எப்படி எல்லாம் ஆட்டம் போட்டீர்கள். எங்கள் தலைவரை எப்படி எல்லாம் திட்டி தீர்த்தீர்கள். இப்போது எங்கள் தலைவர் வாசல் வரை வந்து காத்திருக்க வைத்து விட்டார்கள். எங்கள் கட்சி கூட்டணிக்காக ஒரு மாதமாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அதிமுக நிர்வாகிகளை தலையை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டார்.

 DMDK Decreasing the AIADMK

நாங்கள் அதிமுக கூட்டணிக்கு வந்தால்தான் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க முடியும். ராஜதந்திரத்தில் இப்போதைக்கு எங்கள் தலைவரை விட்டால் வேறு யாரும் கிடையாது எனச் சொல்லி அதிமுக தொண்டர்களை உசுப்பேற்றும் வகையில் பேசி வருகிறார்கள். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios