நான்கு சீட் வாங்கிக் கொண்டு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் எப்படி ஜெயிப்பது? அந்த அம்மாவுக்கு மனசாட்சியே இல்லை’’என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்.

தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் செலவுகளுக்கு பணமின்றி தேமுதிக வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர். பிரச்சாரத்திற்கு செல்லவும், பிற தேவைகளுக்கான செலவுகளுக்கும் பணத்தை விரைவாக அனுப்பி வைக்காமல் இருப்பதால் பிரேமலதா மீது கடும் வேட்பாளர்கள் கடும்க் ஆத்திரத்தில் உள்ளனர். 

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீசும், வடசென்னை தொகுதியில் மோகன்ராஜ், விருதுநகரில் அழகர்சாமி, திருச்சியில் மருத்துவர் இளங்கோவன் ஆகியோர் தேமுதிக வேட்பாளராக களமிறங்கி உள்ளனர்.

பொதுவாக தேமுதிகவில் ஒருசிலரைத் தவிர நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களே அதிகம். வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்கள் தேர்தலில் பணம் செலவழிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள். அதே நிலை மக்களவை தேர்தலிலும் எழுந்துள்ளது. தேமுதிக சார்பில் களமிறங்கு நால்வரில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷை தவிர மற்ற மூவரும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் திருச்சியில் களமிறங்கும் டாக்டர் இளங்கோவன் கடனாளியாக உள்ளார்.

இதனால், மற்ற மூவரும் பணமின்றி தவித்து வருகின்றனர். கூட்டணி கட்சியினர் இந்த மூவரையும் பணம் கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஆகையால் தேமுதிக தலைமை பணம் தரும் என அவர்கள் காத்திருக்கின்றனர். ஆனாலும் கட்சித் தலைமையிடம் இருந்து இன்னும் நம்பிக்கையான பதில் கிடைக்காததால் தவித்துக் கிடக்கின்றனர். தேமுதிக வேட்பாளர்களை அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக- பாஜக நிர்வாகிகள் கண்டு கொள்ளாமலும், பண உதவிகளை வழங்காமலும் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விருதுநகர் தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்தாலும், தேமுதிக வேட்பாளர்களுக்கு எதிராக ஒரு சில அதிமுக முக்கிய புள்ளிகள் உள்ளடி வேலை செய்து வருகிறார்களாம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் தனது சொந்தக் காசை போட்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். 
இதையெல்லாம் தலைமை கண்டு கொள்ளவே இல்லை. பெட்டியை வாங்கி வீட்டிற்குள் வைத்து விட்டு பிரேமலதா ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது தம்பி சுதீஷுக்கு மட்டும் பணத்தை தண்ணீராய் வாரி இரைத்து வருகிறார் என்கிறார்கள் தேமுதிகவினர். இப்படி தவிக்க விடுவதற்கு பதில் தம்பிக்கு மட்டும் சீட்டை வாங்கி கொடுத்துவிட்டு இன்னும் சில சூட்கேஷ்களை வாங்கி வைத்து பணத்தை பெருக்கி இருக்கலாம். இப்போது நான்கு சீட் வாங்கிக் கொண்டு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் எப்படி ஜெயிப்பது? அந்த அம்மாவுக்கு மனசாட்சியே இல்லை’’என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்.