Asianet News TamilAsianet News Tamil

#BREAKING தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தற்காலிக பேருந்து நிலையங்களின் முழு விவரம்..!

கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன ன போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

diwali festival...special buses announce mr vijayabhaskar
Author
Chennai, First Published Nov 3, 2020, 1:41 PM IST

கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன ன போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்தாண்டு 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தீபாவளிக்கு முன் 14, 757 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

diwali festival...special buses announce mr vijayabhaskar

சென்னையில் இருந்து வழக்கம் போல் 6 இடங்களில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும். 13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27 ஆயிரம் பேர் தீபாவளிக்கு வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். நவம்பர் 11, 12,13ம் தேதிகளில் தீபாவளி சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு பிறகு நவம்பர் 15, 16, 18ம் தேதிகளில் மீண்டும் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரம்;-

1. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்:

 வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களுர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

2. மாதவரம் பேருந்து நிலையம்:

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் திருப்பதி, நெல்லூர் பேருந்துகள் இயக்கப்படும்.

3. பூந்தமல்லி பேருந்து நிலையம்:

காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

4. தாம்பரம் சானிட்டோரியம்:

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம் பேருந்துகள் இயக்கப்படும்.

5. தாம்பரம் ரயில் நிலையம்: 

திருவண்ணாமலை, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

6. கே.கே.நகர் பேருந்து நிலையம்: 

இசிஆர் வழியாக கடலூர், புதுச்சேரி, சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

diwali festival...special buses announce mr vijayabhaskar

Follow Us:
Download App:
  • android
  • ios