சசிகலா  இருப்பது போன்ற வீடியோ கிராபிக்ஸ் அல்ல என்றும் அவர் பார்வையாளர் அறைக்கு சென்று வரும் வீடியோவை எதிரிகள் வெளியிட்டுள்ளார்கள் எனவும் திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சில தினங்களில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார் சசிகலா. அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறைக்கு சென்றனர். 

இதைதொடர்ந்து சசிகலாவிடன் லஞ்சம் பெற்று கொண்டு உயரதிகாரி சிறப்பு வசதிகள் செய்து தருவதாக அப்போதை கர்நாடக சிறைத்துறை டிஐஜி யாக இருந்த ரூபா தெரிவித்தார். 

இதையடுத்து சசிகலா ஷாப்பிங் சென்று சிறைக்குள் வருவது போன்ற விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. 

இதைதொடர்ந்து, சசிகலா வெளியில் சென்று வருவது போன்ற வீடியோ விசாரனை ஆணையத்திடம் ரூபா ஒப்படைத்துள்ளார். இதனால் அடுத்தகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 
இந்நிலையில், இதுகுறித்து திவாகரன் மகன் ஜெயானந்த் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். 

அதாவது, சசிகலா  இருப்பது போன்ற வீடியோ கிராபிக்ஸ் அல்ல என்றும் அவர் பார்வையாளர் அறைக்கு சென்று வருவதை யாரோ தவறாக வெளியிட்டுள்ளார்கள் எனவும், தெரிவித்தார். 

சிறையில் இருந்து யாராவதுஷாப்பிங் செல்ல முடியாமா என்றும் நாளை சசிகலா சீராய்வு மனு விசாரணைக்கு வர உள்ளதால் எதிரிகள் திட்டமிட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.