Asianet News TamilAsianet News Tamil

4 மணி நேர சோதனைக்கு பிறகு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் சசி சகோ. திவாகரன்!

Diwakaran was taken for interrogation
Diwakaran was taken for interrogation
Author
First Published Nov 9, 2017, 11:02 AM IST


சசிகலாவின் சகோதரர் திவாகரனை, விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலையில் இருந்தே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

சென்னை, பெங்களூரு, மன்னார்குடி, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, வேளச்சேரி ஃபினிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும், வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரியில் இன்று அதிகாலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்படியொரு வருமான வரித்துறை சோதனை என்பது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது-

அதேபோல, தினகரன் அணி மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், திவாகரன் உதவியாளர்கள் ராசுப்பிள்ளை, சுஜய் ஆகியோர் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை உள்ளே புகுந்து தீவர சோதனையில் ஈடுபட்டுள்ளது. 

கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தவரும் ஐ.டி ரெய்டுக்கு திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகின்றனர். திவாகரன் வீட்டுக்கு முன், அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். இதனை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், திவாகரனை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios