அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா சாப்பிட்ட இட்லிக்கு ஒரு கோடி ரூபாய் பில் போட்ட விவகாரத்திற்கு பல் முளைத்து சசிகலா குடும்பத்தை பதம் பார்த்தும் வருகிறது. இந்த விவகாரத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெளிவான பதிலை அளித்துள்ளர். 


சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவருமான திவாகரன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது அவர், ஜெயலலிதா மரண விசாரணை குறித்த ஆறுமுகசாமி ஆணையத்த்தின் தீர்ப்பு விரைவில் வெளிவரும். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது சசிகலாவின் குடும்பத்தினர் ஒரு சிலர் மட்டும் தான் இருந்தனர். ஜெயலலிதா எழுதிக்கொடுத்து காண்பித்தவர்கள் மட்டுமே அப்பல்லோவில் இருந்தனர். அப்பல்லோவில் சசிகலா குடும்பத்தினர் மட்டும் சாப்பிட்டு அந்த ஒரு கோடி ரூபாய் பில் வரவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் என அனைவரும் சாப்பிட்ட பில் அது. சசிகலாவின் காலில் விழுந்து தான் இதே அமைச்சர்கள் பதவியை பெற்றனர்.

இப்போது அதே அமைச்சர்கள் சசிகலா மீது குற்றம்சாட்டுகிறார்கள். சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என இதே ஓ.பிஎஸும், ஈபிஎஸும் தான் காலில் விழுந்து கேட்டுக்கொண்டனர். அப்போது ஓ.பிஎஸ் ஹோமா நிலையிலா இருந்தார்? கொடநாடு எஸ்டேட்டில் நடந்த மர்மக் கொலைகள் குறித்த விவகாரத்தை சிபிஐயிடம் விசாரிக்கலாம். நேற்று வெளியான தெகல்ஹா ஆவண வீடியோவில் எடப்பாடி பழனிசாமி, தினகரன் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அதற்கு எடப்பாடி பழனிசாமி சார்பாக அமைச்சர் ஜெயகுமார் விளக்கமளித்து விட்டார்.

ஆனால், டி.டி.வி.தினகரன் வாயை திறக்கவே இல்லை. இது அவர் மீது எனக்கும் சந்தேகத்தை கிளப்புகிறது. நான் இப்போது சசிகலா குடும்பத்தில்ன் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்’’ என அவர் தெரிவித்தார்.