Divakaran arguments with Sasikala Regards RK Nagar Election

தினகரனிடம் நானே வலிய சென்று பேசமாட்டேன், ஆர்.கே.நகர் பிரச்சாரத்திற்கும் போகமாட்டேன் என்று சசிகலாவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தினகரன்.

தமது எதிர்ப்பையும் மீறி, தினகரனை பொது செயலாளர் ஆக்கியதால், கோபமடைந்த திவாகரன், சிறையில் இருக்கும் சசிகலாவை கூட சந்திக்காமல் இருந்து வந்தார்.

மனது கேட்காமல், ஒரு கட்டத்தில், தமது மகன் ஜெய் ஆனந்தை அனுப்பி பார்க்க சொன்னதுடன், தினகரனுக்கு எதிராக வத்தி வைப்பதற்கான விவரங்களையும் எடுத்துக் கூறி வந்தார் திவாகரன்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்துள்ளார் அவர். சசிகலாவை பார்த்த மாத்திரத்தில் அவர் கண் கலங்க, சசிகலாவும் அழுதிருக்கிறார்.

பிறகு, நான் சொல்வது எதையும் தினகரன் கேட்பதில்லை. அவனால் இப்போது கட்சிக்கே கெட்ட பெயர் வர போகிறது என மெல்ல, மெல்ல புகார் பட்டியலை வாசிக்க தொடங்கி உள்ளார் தினகரன்.

ஆர்.கே.நகரில் போட்டியிட ஆளே இல்லையா? என்று பலரும் கேட்கிறார்கள். அவனுக்கென்று ஜால்ரா போட நான்கு பேரை வைத்துக் கொண்டு, அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்கிறான்.

அமைச்சர்களில் கூட அவன் யாரையும் மதிப்பது இல்லை. அவன் ஜால்ராக்களுக்கு மட்டுமே கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது. என்று ஒட்டு மொத்த வருத்தத்தையும் கொட்டி தீர்த்து விட்டார் திவாகரன்.

அவர் சொல்வதை எல்லாம் பொறுமையுடன் கேட்ட சசிகலா, நான் சிறையில் இருப்பதால் எதையும் செய்ய முடியவில்லை. 

இங்கு வருபவர்கள் மூலமும், விவேக் மூலமாகவும் நான் தினகரனுக்கு பலமுறை சொல்லி அனுப்பிவிட்டேன். அவன் எதையும் காது கொடுத்து கேட்பதில்லை.

ஆனாலும், இப்போதைக்கு நமக்கு ஆர்.கே.நகர் தேர்தல்தான் முக்கியம். அவன் என்ன செய்தாலும் ஆர்.கே.நகரில் நாம் அவனை கண்டிப்பாக ஜெயிக்க வைக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் யார் என்பதை நிரூபிக்க முடியும். இப்போதைக்கு, பன்னீரும், தீபாவும்தான் நமக்கு எதிரிகள். 

நம் பையனை பிறகு கவனித்துக் கொள்ளலாம். அவன் என்ன செய்தாலும், எங்கே போய்விட போகிறான். அதனால் நீ ஆர்.கே.நகர் போய் பார் என்று திவாகரனிடம் சசிகலா வலியுறுத்தி இருக்கிறார்.

அதற்கு, இதுவரை என்னிடம் எதுவும் பேசாத அவனிடம், நான் வலிய சென்று பேச வேண்டுமா? என்று சற்று கோபத்துடன் கேட்டுள்ளார் திவாகரன்.

 நீ அவனுக்காக போகவேண்டாம், எனக்காக போ என்று சொல்லி இருக்கிறார் சசிகலா. ஆனால், அவனிடம் பேசமாட்டேன், பிரச்சாரத்துக்கும் போகமாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் திவாகரன்.

ஆனாலும், பேச்சின் இடையே, தமக்கோ அல்லது தமது மகனுக்கோ கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்று வழங்க வேண்டும் என்று வலுவாக கோரிக்கை வைத்துவிட்டே வந்திருக்கிறார் அவர்.