கொரோனா தொற்று ஒழிந்து மக்கள் பழையபடி சந்தோசமாக வாழவேண்டும் என்றும் கொரோனா ஒழிய வேண்டியும் தொற்று பரவல் பரவாமல் தடுக்க வேண்டியும்  தனது தந்தையுடன் வந்து மும்முதற்கடவுளான முருகபெருமானை வழிபாடு செய்தார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்.

மானாமதுரை அருகே உள்ள தஞ்சாகூரில் 800 ஆண்டு பழமை வாயந்த ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் ஒரு கோடி செலவில் தெப்பக்குளம் சீரமைக்கும்  பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு முருகனுக்கு வெள்ளி கவசமும், 6அடி உயரத்தில் வெள்ளியால் ஆன வேல் ஆகியவற்றையும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அளித்துள்ளார். மேலும் கொரோன ஒழிய வேண்டியும் தொற்று பரவல் பரவாமல் தடுக்க வேண்டியும்  ஜெயகாந்தன் தனது தந்தையுடன் வந்து வழிபாடு செய்தார்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரியும் சமுக ஆர்வலர்மான  பாலசுப்பிரமணியம் செய்திருந்தார். மேலும் ஆடி 18 முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.