Asianet News TamilAsianet News Tamil

ரேசன் கடைகள் மூலம் உணவு பொருள்கள்..3மாதம் கடன் அடிப்படையில் விநியோகம்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.!

ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்ய கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். இந்திய உணவு கழகம் மூலம் 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம்

Distribution of food items through ration shops.
Author
India, First Published Mar 23, 2020, 9:54 PM IST

T.Balamurukan
சீனாவைல் பிள்ளையார் சுழி போட்ட கொரொனா படிப்படியாக இத்தாலி தென்கொரியா,ஈரான், இந்தியா என மெல்ல மெல்ல தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் தனிமை படுத்த தமிழக அரசு ஆணை  பிறப்பித்துள்ளது. அதன் படி நாளை மாலை 6 மணி முதல் இம்மாதம் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும். 144 தடை உத்தரவினால் பலரும் இன்றே சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சி செய்கின்றனர். சென்னை கோயம்பேட்டில் தற்போது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

Distribution of food items through ration shops.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக யூனியன் பிரதேசங்கள் உட்பட 19 மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது. இதுவரை உலகம் முழுவதும் 15,296 பேர் உயிரிழந்துள்ளனர். 

Distribution of food items through ration shops.

இதற்கிடையில், இந்தியாவிலும் தனது கோர முகத்தை கொரோனா காட்டத் தொடங்கி விட்டது. அதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து 415ஆக உயர்ந்துள்ளது.
 "ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்ய கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். இந்திய உணவு கழகம் மூலம் 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் 

Follow Us:
Download App:
  • android
  • ios