ராஜராஜ சோழன் பற்றிய தனது பேச்சு சித்தரித்தரிக்கப்பட்டதாக தனது ஜாமின் மனுவில் திரைப்பட இயக்குநர் ப,ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய கருத்துகள் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது. அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பா.ரஞ்சித்துக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ப.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இயக்குநர் ப.ரஞ்சித் முன் ஜாமின் மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. ப.ரஞ்சித் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘’ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்று உண்மைகளையே குறிப்பிட்டேன். நில உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினேன். உள்நோக்கத்துடன் நான் பேசவில்லை.

என்னுடைய பேச்சு சமூகசலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது. ராஜராஜ சோழன் ஆட்சிகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என சமூக சீர்திருத்தவாதிகள் கூறி இருக்கின்றனர். ஏற்கெனவே பல சமூக ஆர்வலர்கள் கூறிய கருத்துக்க்ளை யே கூறினேன். எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களையும் பிளவு படுத்தும் வகையில் அமையவில்லை. சமூகத்திற்கு எதிரான கருத்துகளையும் கூறவில்லை’’ என அவர் விளக்கமளித்து உள்ளார்.