நடிகர் விஜய்யை தேவையில்லாமல் தாக்குவதால் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பு தான் ஏற்படும் என சமீபத்தில் பாஜகவில் இணைந்த இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார் .  நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் அவரது இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகயில் ஈடுபட்டனர்,  பின்னர் அது தொடர்பாக படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து விசாரணை நடத்திய  வருகின்றனர். 

இதனால் விஜய் நடித்து வரும் மாஸ்டர்  படத்தின் படப்பிடிப்பு  முற்றிலுமாக தடைபட்டுள்ளது .  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விஜய்யை குறிவைத்து வருமான வரிச்சோதனை  நடத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.   இந்நிலையில் திரைப்பட இயக்குனரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்கே செல்வமணி விஜயின் படப்பிடிப்பில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்திருப்பது தேவையற்றது என விமர்சித்துள்ளார்.   இந்நிலையில் சமீபத்தில் தமிழக பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட இயக்குனர் பேரரசு  நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் . இது பாஜகவினருக்கு மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,   நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜகவினர் போராட்டம் தேவையற்றது... விஜய் நடிகர் ,  அரசியல்வாதி அல்ல... இதுபோன்ற செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாகும் ,  அவருடைய கோடான கோடி ரசிகர்களுக்கு மன வேதனையை தரும் ,  நாட்டில் போராட வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன என கடுமையாக சாடியுள்ளார் . பாஜகவைச் சேர்ந்த இயக்குனர் பேரரசுவின் இந்த பதிவால் அப்செட் ஆகியுள்ளார்  இதை எதிர்க்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் பாஜகவினர் திணறி வருகின்றனர் .