ஈரோடு இடைத்தேர்தல்.! காங்கிரஸ் வேட்பாளர் யார்.? எப்போது அறிவிக்கப்படும்?மேலிட பொறுப்பாளர் கூறிய பரபரப்பு தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெயர் மிக விரைவில் வெளியிடப்படும் என மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் அமைச்சர்கள் முகாம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக பணியாற்றி வந்த ஈ வி கே எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா அண்மையில் திடீரென மரணம் அடைந்தார். இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறவைக்க திமுக களத்தில் இறங்கியுள்ளது. அமைச்சர்கள் ஈரோடு மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். அமைச்சர் முத்துசாமி காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்காக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவில்லை.! கூட்டணி கட்சி திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் இபிஎஸ்
காங்கிரஸ் வேட்பாளர் யார்.?
இவிகேஸ் இளங்கோவன் நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு இருப்பதால் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லையென கூறப்படுகிறது. எனவே இவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது சஞ்சய் சம்பத்தை களமிறக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் கொண்டுவராவ், முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை ஆலோசனை நடத்தினார் . இதில் மூத்த நிர்வாகிகளான தங்கபாலு , ஈ வி கே எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சருக்கு நன்றி
வேட்பாளர் பெயரை எப்போது அறிவிப்பது, வெற்றி வாய்ப்பு நிலவரம் , தேர்தல் பணி உக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, நிர்வாகிகளுடன் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தினேஷ் குண்டு ராவ் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தமிழக முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், இடைத்தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் வேட்பாளர் பெயர் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்? வெளியான தகவல்..!