காதல் மன்னன் காசியை தொடர்ந்து அவனது நண்பனான தினேஷ்சை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நாகர்கோவில் காசி இளம்பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி அவர்களுடன் போட்டோ எடுத்து அதைவைத்து மிரட்டி பணம் சம்பாதிப்பது உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பது.மற்றவர்களுக்கு அந்த பெண்களை பயன்படுத்தி வந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் காசி மீது பதியப்பட்டுள்ளது. உல்லாசமாக ஆடம்பரமான கார்கள் பணக்கார பெண்கள் என வலம் வந்த காசிக்கும் பெண் டாக்டருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது தான் இந்த விசயமே வெளி உலகிற்கு தெரிய வந்தது. அதன் பிறகு பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் காசியை கைது செய்து விசாரணை செய்ததில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.


இதன் தொடர்ச்சியாக காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டது.அதன் பிறகு சிபிசிஐடி போலீசார் தினேஷ்சை கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


"காதல் மன்னன் காசிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவன் தினேஸ். இந்த தினேஷ் குருவை மிஞ்சிய சிஷ்யனாக வலம் வந்திருக்கிறான். காசியுடன் நெருக்கமாக இருந்த பெண்கள் அவனிடம் இருந்து பிரிந்து சென்றால் அவர்களை விடாமல் தினேஸ்சை வைத்து துரத்தி பிடிப்பது. விலையுர்ந்த கார்களில் அந்த பெண்களை அழைத்து சென்று உல்லாசமாக இருக்கும் போது அதை போட்டோ எடுத்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பதும் நண்பர்களுக்கு அந்த பெண்களை சப்ளை செய்வதுமாக இருந்திருக்கிறான் தினேஷ். இவனுடைய பேங்க் அக்கவுண்ட் நம்பருடன் பல்வேறு பெண்களின் வங்கி கணக்கும் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


கோவையில் பட்டப்படிப்பு முடித்துள்ள தினேஷ் சென்னையில் சட்டப்படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. பணக்கார பசங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும் அவர்கள் பயன்படுத்தி வந்த விலையுர்ந்த கார்களில் அந்த பெண்களை வெளியூர்களுக்கு உல்லாசத்திற்கு அழைத்து சென்றதும் தெரியவந்திருக்கிறது. தினேஷ்சை தொடர்ந்து இன்னும் சிலர் சிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடர்ந்து கொண்டே இருக்கும்..