காவல் துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்டு வரும் ரத்ததான முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் காலணியை அவரது
உதவியாளர் அணிவித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை, ராஜரத்தனம் மைதானத்தில், காவல்துறை சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ரத்ததான முகாமை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

முகாம் துவங்குவதற்கு முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா
படத்துக்கு மரியாதை செலுத்தி விட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலணி அணியும்போது, அவரது உதவியாளர் கீழே குணிந்து அவரது காலணியை அணிவித்து விட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.