Dindigul seenivasan speech

சசிகலாவும், தினகரனும் ரொம்ப நல்லவர்கள்…ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியவர்கள்…திண்டுக்கல் சீனிவாசன் பாராட்டு..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலாவும், தினகரனும் ரொம்ப நல்லவர்கள். அவர்கள் தான் ஜெயலலிதாவின் உயிரையும், உடைமையையும் காப்பாற்றியவர்கள் என தெரிவித்தார்.

மேலும் அவர்கள் நல்லவர்கள் என்பதை அதிமுக நிர்வாகிகள் பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

தொடர்ந்து பேசிய அமைச்சர் சீனிவாசன், ஓபிஎஸ் அணிக்கு சென்றவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்து மீண்டும் கட்சிக்கு அழைத்து வரவேண்டும் என நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓபிஎஸ் அணிக்கு சென்ற எம்எல்ஏக்களும், எம்பிக்களும் தன்னிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும், ஏதோ ஒரு கோபத்தில் சென்றோம். விரைவில் திரும்பி வருவோம் என்று அவர்கள் சொல்லிவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜெயலலிதா இறந்த பின் கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்பது அப்போதைய சூழ்நிலை என்றும் தற்போது துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்

இதை முறையாக தேர்தல் கமிஷன் அணுகவில்லை என்றும், தற்போது அதற்கு சரியான விளக்கத்தை தந்துள்ளதாகவும் சீனிவாசன் தெரிவித்தார்.