தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் செய்தியாள்களிடம் பேசினார். அப்போது வரும் 21 ஆம தேதி நடைபெறவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல்களில் அதிமுக பெரவாரியான வாக்குள் பெற்று வெற்றிபெறும் என தெரிவித்தார்.

சீன அதிபரை தமிழகத்துக்கு வரவழைத்து பேசுவதற்காக பிரதமர் மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதில் இருந்து அவரும் எங்களுடன் தான் இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என சீனிவாசன் கூறினார்.

18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி.தினகரன் மட்டும் காரணம் அல்ல என்று தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என குற்றம்சாட்டினார்.

ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும், டி.டி.வி.தினகரன் துணை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை அவர்கள் இருவரும் கெடுத்து விட்டார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். ஆனால் இந்த திட்டம் பணால் ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.