காமெடி நடிகர் செந்திலுக்கு, அமமுகவில் அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார், அமமுக பொதுச்செயலாளர் தினகரன். இந்த விவகாரம் தான் இப்போது  அரசியல் வட்டாரத்தில் விவாதமாகியிருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கரூர் செந்தில்பாலாஜி, ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து தொடர்ந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. படிப்படியாக பலரும் கட்சியை விட்டு தாவி வரும் நிலையில் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்பட்ட புகழேந்தியும் வேறு கட்சிக்கு மாறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.  

தற்போது கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடக்கும் நிலையில், அமமுகவில் அமைப்பு செயலாளர் பதவியை காமெடி நடிகர் செந்திலுக்கு கடுக்க உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார். தினகரனின் கட்சியில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவி வரும் விவகாரம் முக்கிய விவாதமாக சமூக வலைதளங்களில் மாறியிருக்கிறது.

இது குறித்து விமர்சித்துள்ள பலரும், யாரும் இல்லாத கடையில, யாருக்குபா டீ ஆத்திகிட்டு இருக்கீங்க? இதுனால யாருக்கு பிரயோஜனம்? அமமுகவில் அவர் மட்டும் தான் ஹீரோ மற்றவர் எல்லாம் ஜீரோ, யாருக்கு வேணும் அந்த பதவி என்று தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.