கடந்த சில மாதங்களாக நடந்துவந்த குடும்ப மோதல் உச்சகட்டத்தை கிளைமேக்சில் உள்ளது. ஆமாம் சின்னஅம்மி வாயாலே, நீ எனக்கு தமிபியா இருக்கலாம் ஆனால் தினகரன்தான் என்னோட செல்லப்பிள்ளை என சொல்லும் அளவிற்கு ஒரு நோட்டிஸ் அக்ராஹாராவிலிருந்து மன்னார்குடிக்கு பறந்தது. இதனையடுத்து அம்மாவின் செல்லப்பிள்ளையை கழற்றிவிட ஸ்கெட்ச் போட்டுள்ளார் ஆர்.கே.நகர் நாயகன்.

மாமாவை கழட்டிவிட மகனின் சூழ்ச்சியை மாமா கேங்கில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. தினா போட்டு கொடுத்த தால் தான் இப்படியொரு நோட்டீஸ் கொடுத்துள்ளார் சின்னமம்மி என அல்லு சில்லுகள் அலறித்துடித்துக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து அக்ராஹாரவுக்கு தினா சந்திக்கச் சென்றபோதே, இப்படி நடக்குமென மாமாவுக்கு தெரியுமாம்.

"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவித இடைஞ்சலும் வந்துவிடக் கூடாது என உறுதியாக இருக்கும் தினா. அரசியல் ஆலோசனை என்ற பெயரில், மாமா குரூப் உள்ளே நுழைவதையும் அவர் விரும்பல. அதனால ஒரே ஒரு நோட்டீஸிலில் மாமாவின் அரசியல் ஆசைக்கு சமாதி கட்ட நினைத்த தினா இப்படி ஒரு பக்கா ஆப்பை சீவி அனுப்பினார்.

தனாவின் அடுத்த டார்கெட் என்ன தெரியுமா? ஆங்க அதேதான்? அம்மாவின் செல்லப்பிள்ளை தான் அது, நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி என முக்கிய ப்ராபர்டியை வைத்திருக்கும் ஜாஸ் ஹீரோவிடமிருந்து. லம்ப்பாக இரண்டையும் கைப்பற்றுவது தினாவின் மெயின் டிரீம். ஆனால் அப்படி செஞ்சிட்டா, இளவரசி குடும்பம் டென்ஷனின் உச்சத்துக்கே சென்றுவிடுமாம் அதனாலே சைலட்டாக இருக்கும் தினா, முதலில் சின்னமம்மியை சந்திப்பது துண்டிக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்.