Dinakaran supporter R. Samy Ex MLA death
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த மதுரை, மேலூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாமி இன்று காலமானார்.
மதுரை, மேலூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாமி, அதிமுக சார்பில் 2001, 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அணிகளாக பிளவு அடைந்தது. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினருக்கு அதிமுக கொடியும், சின்னமும் வழங்கப்பட்டன. இந்த நிலையில், டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினை தொடங்கினார். டிடிவி தினகரனுக்கு ஆர்.சாமி தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.
ஆர்.சாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தார். ஆர்.சாமிக்கு அமமுக-வில் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்.சாமி கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சையும் அவர் பெற்று வந்தார். இந்த நிலையில் டிடிவி தினகரன், ஆர்.சாமியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று அவரது இல்லத்துக்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில், ஆர்.சாமி இன்று மரணமடைந்தார். ஆர்.சாமியின் இறப்பு, மேலூர் மட்டுமின்றி அனைத்து நிர்வாகிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
