அமைச்சர்களை இதைவிட மோசமாக விமர்சிக்க முடியாது என்கிற அளவுக்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம், தினகரன் அணி சார்பில் மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, மணிகண்டன் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும் உதயகுமாரும் டிஸ்கவரி சேனலில் வரும் விநோத பிராணிகளை போன்றவர்கள்.

அதிலும் உதயகுமாரை போன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. எந்த பள்ளியில் நடிப்பை படித்தாரோ தெரியல.. உலக மகா நடிப்பு. திடீர்னு தாடி வைப்பார், திடீர்னு மொட்டை போடுவார்.. சின்னம்மாதான் முதல்வராகணும்னு சொல்வாரு.. அப்புறம், காசு பார்ப்பதற்காகத்தான் அங்கே இருக்கேன்னு சொன்னார்.. மறுபடியும் உங்க பக்கம் வந்துடுறேன்ன்னு மேலூர் சாமியிடம் போய் சொன்னவர்தான் உதயகுமார் என கடுமையாக விமர்சித்தார் புகழேந்தி.

ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன்லாம் ஒரு டாக்டரா? இங்கதான் அரசு மருத்துவமனையில டாக்டரா வேலை பார்த்ததா சொல்றாங்க.. ஒருவேளை போஸ்ட் மார்டம் பண்ற டாக்டரா இருப்பார்னு நினைக்கிறேன்.. அதிமுக கரை வேட்டியை நாம கட்டக்கூடாதுனு மணிகண்டன் சொல்றாரு.. வேட்டியோட வரலாறு தெரியுமா மணிகண்டனுக்கு  என புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

மேலும் மணல் அள்ளுறதுல கமிஷன் வாங்குறதுக்கு இடைஞ்சலாக இருந்த ஆர்.டி.ஓவை டிரான்ஸ்பர் பண்ணதால மக்கள் மணிகண்டன் மேல கோபமா இருக்காங்க. அதை திசை திருப்புறதுக்காக இப்படிலாம் பேசுறாரு.. இப்ப பணத்த எண்ணு மணிகண்டா.. தினகரன் முதல்வரானதும் கம்பி எண்ணுவ என பாரபட்சமும் சமரசமும் இல்லாமல் அமைச்சர்களை வெளுத்துவாங்கினார் புகழேந்தி.