Asianet News TamilAsianet News Tamil

ராஜினாமா செய்கிறார்களா தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ? கவிழ்கிறது எடப்பாடி அரசு !!!

dinakaran support mlas plan to resign
dinakaran support mlas plan to resign
Author
First Published Aug 11, 2017, 8:14 AM IST


டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் இன்றோ அல்லது நாளையோ ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அவர்கள் பதவி விலகினால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் கவிழும் என கூறப்படுகிறது.

அதிமுகவில் உள்ள டி.டி.வி.தினகரன் அணிக்கும், எடப்பாடி பழனிசாமி அணிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி அணியினர், தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனார்.

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், கட்சியில் அவரது நியமனங்களும் செல்லாது என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் எந்த வகையில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து, டி.டி.வி.தினகரனின்  ஆதரவாளர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து  தினகரனால் பதவி பெற்ற, 19 எம்எல்ஏக்கள் , தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. 

ராஜினாமா முடிவு எடுக்கும்பட்சத்தில், பழனிசாமி அரசு கவிழும் என, தினகரன் ஆதரவு வட்டாரம் தெரிவித்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios